சாலையோரம் வளர்ந்து படர்ந்துள்ள கருவேல மரக்கிளைகளால் விபத்து அபாயம்
சாலையோரம் வளர்ந்து படர்ந்துள்ள கருவேல மரக்கிளைகளால் விபத்து அபாயம்
UPDATED : ஜூன் 01, 2026 04:15 PM
ADDED : ஜூன் 01, 2026 03:50 PM

அ நிறம் | அளவு
வண்டலுார் - வாலாஜாபாத் சாலை வழியே, ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், ஒரகடம் தொழிற்சாலை தொழிற்பயிற்சி நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையோரம் கருவேல மரக்கிளைகள் வளர்ந்து படர்ந்து உள்ளன.
இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள மரக்கிளைகளில் உரசி விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையின் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி. பார்த்திபன்,
ஒரகடம்.
