/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாடகி இசைவாணி மீது உத்திரமேரூரில் புகார்
/
பாடகி இசைவாணி மீது உத்திரமேரூரில் புகார்
ADDED : டிச 01, 2024 12:36 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, பெருநகர் காவல் நிலையத்தில், இந்து முன்னணி காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலர் லட்சுமணன் தலைமையில்,சுவாமி அய்யப்பன் பற்றி, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பாடல் பாடிய, கானா பாடகி இசைவாணி மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
மனு விபரம்:
கானா பாடகி இசைவாணி என்பவர், தான் பாடிய பாடல் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார்.
இந்த பாடல், இந்து கடவுளான அய்யப்பனை வணங்கும் பக்தர்களின்,மனதை புண்படுத்தும் வகையிலும், மத மோதலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, உத்திரமேரூர் காவல் நிலையத்திலும், பாடகி இசைவாணி மீது இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

