/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு நெடுஞ்சாலை துறை போலீசில் புகார்
/
சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு நெடுஞ்சாலை துறை போலீசில் புகார்
சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு நெடுஞ்சாலை துறை போலீசில் புகார்
சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு நெடுஞ்சாலை துறை போலீசில் புகார்
ADDED : ஜன 26, 2025 01:43 AM

உத்திரமேரூர்:புக்கத்துறை -- பெருநகர் நெடுஞ்சாலையில் உள்ள காரணி மண்டபம் கிராமத்தில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு வேம்பு, புளியமரம், வாகை மரம் ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த மரங்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு குளிர்ச்சியான சூழலையும், நிழலையும் வழங்கி வருகின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த காற்றை உள்வாங்கி, நல்ல காற்றாக மாற்றி தருகின்றன.
இந்நிலையில், காரணி மண்டபம் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஐந்து வேப்ப மரங்கள், மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர், சாலையோரத்தில் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை, மர்ம நபர்கள் அனுமதியின்றி வெட்டியுள்ளதாக, பெருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, மரங்களை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நெடுஞ்சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் மரங்கள், மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும், புயல் மற்றும் மழை நேரங்களில், தனிநபர்கள் சிலர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், நன்றாக வளர்ந்த மரங்களை கூட மழையால் சாய்ந்து விட்டதாக கூறி, அனுமதியின்றி வெட்டி சென்று விடுகின்றனர்.
இதை பாதுகாக்க வேண்டிய நெடுஞ்சாலை துறையினர் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே, சாலையோர மரங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

