/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிகாரி இன்றி ஆதிதிராவிடர் துறை பணி சுணக்கம் ஏற்படுவதாக புகார்
/
அதிகாரி இன்றி ஆதிதிராவிடர் துறை பணி சுணக்கம் ஏற்படுவதாக புகார்
அதிகாரி இன்றி ஆதிதிராவிடர் துறை பணி சுணக்கம் ஏற்படுவதாக புகார்
அதிகாரி இன்றி ஆதிதிராவிடர் துறை பணி சுணக்கம் ஏற்படுவதாக புகார்
ADDED : மார் 04, 2024 06:21 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. பட்டியலின மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அரசு திட்டங்கள் செயல்படுத்துவது, 16 மாணவர்களுக்கான விடுதிகள் பராமரிப்பு, 32 பள்ளிகள் பராமரிப்பு போன்றவை இந்த அலுவலகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், இந்த துறைக்கான மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பணியிடம், எட்டு மாதங்களாக காலியாக இருப்பதால், கோப்புகள் தேக்கமடைவதோடு, விடுதிகளுக்கான நிதி விடுவிப்பதற்கான பணிகள் சுணக்கமடைவதாக புகார் எழுகிறது.
இப்பணியிடத்தில், ஜூன் 2023ல், பிரகாஷ்வேல் என்பவர் ரெகுலர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். அத்துடன், ரெகுலர் அதிகாரி யாரையும், ஆதிதிராவிடர் நலத்துறை நியமிக்காமல் உள்ளது.
இதனால், நிலம் பிரிவுக்கான துணை கலெக்டர் கணேஷ் என்பவரை பொறுப்பு அதிகாரியாக மாவட்ட நிர்வாகம் நியமித்திருந்தது. அவரை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இப்போது, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சத்யா என்பவர் பொறுப்பு அதிகாரியாக செயல்படுகிறார்.
ரெகுலர் அதிகாரி யாரையும் நியமிக்காமல், துறை மேலிடம் அலட்சியம் காட்டி வருகிறது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அதிகாரியை நியமிப்பது பற்றி துறை மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றனர்.

