/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கணினி, ஸ்மார்ட் போர்டு நாவலுார் பள்ளிக்கு வழங்கல்
/
கணினி, ஸ்மார்ட் போர்டு நாவலுார் பள்ளிக்கு வழங்கல்
கணினி, ஸ்மார்ட் போர்டு நாவலுார் பள்ளிக்கு வழங்கல்
கணினி, ஸ்மார்ட் போர்டு நாவலுார் பள்ளிக்கு வழங்கல்
ADDED : டிச 09, 2025 05:01 AM
ஸ்ரீபெரும்புதுார்: தனியார் தொழிற்சாலை சார்பில், நாவலுார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கணினி, ஸ்மார்ட் போர்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு, பவர் கிரிட் கார்ப்பரேஷன் எனும் தனியார் தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கணினி, ஜெராக்ஸ் மிஷின், பிரின்டர், 5 வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு டேப் உள்ளிட்ட உபகரணங்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன.
கொளத்துார் பொறுப்பு ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் ரவிசங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

