/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?முகவரி மாறியவர்களை கண்டறிவதில் சிக்கல்
/
காஞ்சிபுரத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?முகவரி மாறியவர்களை கண்டறிவதில் சிக்கல்
காஞ்சிபுரத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?முகவரி மாறியவர்களை கண்டறிவதில் சிக்கல்
காஞ்சிபுரத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?முகவரி மாறியவர்களை கண்டறிவதில் சிக்கல்
ADDED : டிச 09, 2025 05:03 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டசபை தொகுதிகளில் 14 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், அதில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பிருப்பதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இரட்டை பதிவு, இறந்து போனவர்கள், முகவரி மாறியவர்களை கண்டறிவதில் உள்ள சிக்கலால், வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக, அவர்கள் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.
வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்கள் கோரி, 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் விண்ணப்பம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று வருகின்றனர்.
கணக்கெடுப்பு படிவம் நவ., 4ல் துவங்கி, டிச., 4ம் தேதியுடன் இப்பணி முடிக்க வேண்டும் என அறிவி க்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் விண்ணப்பங்களை வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், டிச., 11ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டசபை தொகுதிகளில் 14.22 லட்சம் வாக் காளர்களில், இரு நாட்கள் முன் வரை 13.67 லட்சம் பேருக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்தல் கமிஷனின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி 99 சதவீதம் முடிந்துள்ளது.
முகவரி மாற்றம் காரணமாக 55,000 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்க முடியாமல் உள்ளது. தவிர, இரட் டை பதிவு, இறந்தவர்கள் என, 56,000 பேர் இருப்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. இதனால், 1.11 லட்சம் பேர், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்ப ட வாய்ப்புள்ளது.
இதனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், முகவரி மாறி சென்றவர்களை அடையாளம் காண உதவும்படி, அனைத்து கட்சி முகவர்களிடம் கேட்டுள்ளனர்.
அதனால், தேர்தல் அலுவலர்கள் மட்டுமின்றி, கட்சி பிரமுகர்களும், வாக்காளர்களின் படிவங்களை பெற்று, அவர்களை தேடி கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
வாய்ப்பு கணக் கெடுப்பு படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க, இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாவட்ட தொடர்பு உதவி எண் 044 - 1950 மற்றும் 044 - 272 37107 ஆகிய எண்களில் தொடர்பு கொ ள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உரிய முகவரியில் இருந்து இடம் மாறி போனவர்களை அடையாளம் காண, ஓட்டுச்சாவடி நிலை முகவர்களிடம் கேட்டுள்ளோம். வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்கள் யாரையும் நீக்கக்கூடாது என்பதே இப்பணியின் குறிக்கோள்.
இருப்பினும், இறந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரியில் வசிக்காதவர்கள் என, 1.11 லட்சம் பேர் உள்ளனர்.
அவர்களை கண்டறிய முடியவில்லை என்றால், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களை நீக்க வாய்ப்பு உள்ளது.
இதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச., 16ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 14ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

