/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒருமையில் பேசும் நடத்துநர்கள்; பெண் பயணியர் குற்றச்சாட்டு
/
ஒருமையில் பேசும் நடத்துநர்கள்; பெண் பயணியர் குற்றச்சாட்டு
ஒருமையில் பேசும் நடத்துநர்கள்; பெண் பயணியர் குற்றச்சாட்டு
ஒருமையில் பேசும் நடத்துநர்கள்; பெண் பயணியர் குற்றச்சாட்டு
ADDED : டிச 29, 2025 07:04 AM
குன்றத்துார்: தமிழக அரசு கொண்டு வந்த மகளிருக்கான 'விடியல் பயணம்' திட்டத்தின் கீழ், சாதாரண கட்டணப் பேருந்துகளில், பெண்கள் மற்றும் திருநங்கையருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், குன்றத்துார், அய்யப்பன்தாங்கல் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து பம்மல், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு, நடத்துநர்கள் முறையாக டிக்கெட் வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பெண் பயணியர் கூறியதாவது:
நடத்துநர்கள் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டே, டிக்கெட்டுகளை மொத்தமாக கிழித்து பெண்களிடம் கொடுக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், சில பேருந்து நடத்துநர்கள், பெண் பயணியரிடம் கனிவாக பதில் சொல்லாமல், ஒருமையில் பேசுகின்றனர். 'ஓசி' டிக்கெட் எனக்கூறி அவமானப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து, சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் கவுரவமான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

