/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பறிமுதல் வாகனங்கள் ரூ.9.33 லட்சத்திற்கு ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் ரூ.9.33 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஜன 08, 2025 07:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சிக்கிய 23 இருசக்கர வாகனங்கள், இரண்டு ஆட்டோக்கள், ஒரு சரக்கு வாகனம், ஒரு கார் என, மொத்தம் 27 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வாகனங்கள் சின்ன காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகம் முன், காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சரண்யாதேவி, முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
இதில், 27 வாகனங்களும் 9 லட்சத்து 33 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.