/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கராத்தேவில் வெள்ளி மாணவிக்கு பாராட்டு
/
கராத்தேவில் வெள்ளி மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜன 10, 2025 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான -56 கிலோ எடை பிரிவில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் பங்கேற்ற மாணவி ஓவியஸ்ரீ, 17, வெள்ளி பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற மாணவிக்கு தமிழக அரசு சார்பில், 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற வீராங்கனை ஓவியஸ்ரீக்கு பாராட்டு விழா, பயிற்சி பள்ளி சார்பில், காஞ்சிபுரத்தில் நடந்தது.

