/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கொட்டப்படும் கட்டடக்கழிவு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ADDED : மே 01, 2025 12:54 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கருக்குப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பெண்டை கிராமம் வழியாக வில்லிவலம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
ஏகனாம்பேட்டை பள்ளி மைதானம் அருகே, நாயக்கன்பேட்டை, தாங்கி கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இச்சாலை வழியாக ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை பகுதிக்கு தாங்கி, நாயக்கன்பேட்டை, வில்லிவலம் ஆகிய கிராம மக்கள் தங்களின் தேவைக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை ஓர வளைவில், கட்டடக்கழிவுகளை கொட்டி உள்ளனர். இந்த கட்டடக்கழிவில் இருக்கும் இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கால்கள் பதம் பார்க்கிறன.
இதுதவிர, ஏகனாம்பேட்டை மேல் நிலை நீர் தேக்க தொட்டி அருகே, போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை ஓரம் கொட்டிய கட்டடக்கழிவுகளை அகற்ற சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.