/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிதாக சிறுபாலம் கட்டும் பணி துவக்கம்
/
புதிதாக சிறுபாலம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 07, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் கடல்மங்கலம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மருதம் -- தோட்டநாவல் சாலையில் இருந்து பிரிந்து, பிள்ளையார் கோவில் சிமென்ட் சாலை செல்கிறது.
இந்த இரு சாலை இணையும் இடத்தில், மழைநீர் வடிகால்வாய் மீது சிறுபாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, சிறுபாலம் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டு, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஒன்றிய பொது நிதியிலிருந்து, 4.50 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.

