/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டுமான தொழில்பயிற்சி வகுப்பு வையாவூரில் துவக்கம்
/
கட்டுமான தொழில்பயிற்சி வகுப்பு வையாவூரில் துவக்கம்
கட்டுமான தொழில்பயிற்சி வகுப்பு வையாவூரில் துவக்கம்
கட்டுமான தொழில்பயிற்சி வகுப்பு வையாவூரில் துவக்கம்
ADDED : நவ 03, 2025 01:03 AM
வையாவூர்: இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் சார்பில், கட்டுமான தொழிற்பயிற்சி வகுப்பு துவக்க விழா வையாவூரில் நேற்று நடந்தது.
இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையமும், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகமும் இணைந்து, 35 பயனாளிகளுக்கு இலவசமாக கட்டுமான தொழிற்பயிற்சி வகுப்பு துவக்க விழா, காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில் நேற்று நடந்தது.
பயிற்சி மைய இயக்குநர் உமாபதி தலைமை வகித்தார். மகளிர் திட்ட உதவித் திட்ட இயக்குநர் ஸ்ரீலதா பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். வையாவூர் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார்.
கட்டுமான தொழிலில் உள்ள வேலைவாய்ப்புகள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் 30 நாட்கள் நடைபெறும் பயிற்சியின் சிறப்புகள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திலீப் விளக்கினார்.
ஏனாத்துாா இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் அபினவ் நன்றி கூறினார்.

