ADDED : நவ 03, 2025 01:00 AM
குன்றத்துார்: குன்றத்துார் அடுத்த இரண்டாம்கட்டளை பகுதியில், குன்றத்துார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, ஆட்டோவில் இருந்து காரில் பார்சல் ஒன்றை ஏற்றுவதை பார்த்த போலீசார், அங்கு சென்றனர்.
ஆனால், போலீசாரை பர்த்ததும், அங்கிருந்த நான்கு பேர் தப்பியோடிய நிலையில், ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த பார்சலை பரிசோதனை செய்தபோது, அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் பிடிபட்ட நபர், அதே பகுதியை சேர்ந்த யாபேஸ் வில்சன், 39, என்பது தெரிய வந்தது. இவர், சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
இவரிடம் பணியாற்றும் நான்கு கார் ஓட்டுனர்கள் மூலம், ஒடிஷாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, யாபேஸ் வில்சன் மற்றும் அவரது கார் ஓட்டுநர்கள் கவிமணி, 29, முகமது அப்துல்லா, 29, ராஜேஷ், 32, சுகுமார், 32, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

