/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருஊரக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை
/
திருஊரக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை
திருஊரக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை
திருஊரக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை
ADDED : ஜன 23, 2025 09:59 PM
குன்றத்துார்:குன்றத்துாரில் பழமை வாய்ந்த திருஊரக பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. வரும் பிப்., 3ல் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.
இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், குன்றத்துார் முருகன் கோவில் வளாகத்தில் நேற்று, அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமையில் நடந்தது.
இதில் வருவாய், காவல், மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். துறைகள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மருத்துவ முகாம்கள், போலீசார் பாதுகாப்பு, சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனையில், அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதாகார்த்திகேயன், ஜெயகுமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீ கன்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.