/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுகர்வோர் விழிப்புணர்வு பாதுகாப்பு கருத்துப்பட்டறை
/
நுகர்வோர் விழிப்புணர்வு பாதுகாப்பு கருத்துப்பட்டறை
நுகர்வோர் விழிப்புணர்வு பாதுகாப்பு கருத்துப்பட்டறை
நுகர்வோர் விழிப்புணர்வு பாதுகாப்பு கருத்துப்பட்டறை
ADDED : மார் 12, 2025 08:49 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லுாரில், உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், நுகர்வோர் விழப்பணர்வு பாதுகாப்பு கருத்துப்பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் மோகன் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கி, காப்பீட்டுத்துறை என்ற தலைப்பில் கருத்துப்பட்டறை நடந்தது.
தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி இந்தியன் வங்கி கிளை வாயிலாக சுமதி, முனுசாமி ஆகிய இரண்டு பேர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை காசோலையை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் மோகன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வழங்கினர்.
மேலும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், இருங்காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து கற்பிக்கவும், நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், தனியார் பொறியியல் கல்லுாரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கப்பட்டது.
காப்பீட்டுத் துறையில் நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தலைப்பின்கீழ் பள்ளி மற்றும் கல்லுாரிகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.