/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைப் லைன் உடைப்பால் மாசாகும் குடிநீர்
/
பைப் லைன் உடைப்பால் மாசாகும் குடிநீர்
ADDED : அக் 30, 2024 09:08 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், திருமால்பூர், பள்ளூர், தக்கோலம் வழியாக பெருமுச்சி, அரக்கோணம் ராஜாளி மற்றும் தக்கோலம் மத்திய பாதுகாப்பு பயிற்சி மைய குடியிருப்புகளுக்கு குடிநீர் பைப் லைன் செல்கின்றன.
இந்த பைப் லைன் வாயிலாக, தினசரி 5 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்து, மத்திய அரசு ஊழியர்களின் குடிநீர் மற்றும் பிற உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பைப் லைன் நீண்ட துாரம் செல்ல வேண்டும் எனில், ஆங்காங்கே ஏர் வால்வு அமைக்கப்பட்டு உள்ளன.
ஏர் வால்வு இல்லாத பகுதிகளில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இதில், பள்ளூர் - சேந்தமங்கலம் இடையே, பொன்னியம்மன் கோவில் அருகே பைப் லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் இருந்து வீணாகும் தண்ணீரால், குடிநீர் மாசுபடும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, குடிநீர் வீணாவதையும், மாசு ஏற்படுவதையும் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

