/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
/
கால்வாய் அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
கால்வாய் அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
கால்வாய் அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
ADDED : அக் 05, 2024 12:23 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சி, காமராஜர் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளின் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அப்பகுதியில் புதிதாய் கட்டப்பட்டுவரும் வீட்டின் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல சாலையோரம் உள்ள வடிகால் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளின் இருந்த வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் செல்ல வழியின்றி சாலையில் வழிந்தோடுகிறது.
நான்கு மாதங்களுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்னையால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.
மேலும், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் குழந்தைகள், வயதானோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பருவ மழைக்கு முன், கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.