/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொள்ளாழி குளம் ஆக்கிரமிப்பு சீரமைப்பதில் தொடரும் சிக்கல்
/
தொள்ளாழி குளம் ஆக்கிரமிப்பு சீரமைப்பதில் தொடரும் சிக்கல்
தொள்ளாழி குளம் ஆக்கிரமிப்பு சீரமைப்பதில் தொடரும் சிக்கல்
தொள்ளாழி குளம் ஆக்கிரமிப்பு சீரமைப்பதில் தொடரும் சிக்கல்
ADDED : ஜன 24, 2025 01:15 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தொள்ளாழி கிராமம். இக்கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் ஊராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் பரப்பிலான பொதுக்குளம் உள்ளது.
கடந்த ஆண்டுகளில், இந்த குளத்து நீர் அப்பகுதிக்கான குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. அதன்பின், மாற்று குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கால்நடைகளுக்கான நீர் ஆதாரமாகவும், அப்பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இக்குளத்தை சுற்றியுள்ள அப்பகுதியை சேர்ந்த சிலர், குளத்தங்கரையில் குடியிருப்புகள் அமைத்தும், கால்நடைகளுக்கான கொட்டகை ஏற்படுத்தியும், வைக்கோல் மற்றும் குப்பை கழிவுகள் குவித்தும் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், குளத்தின் அளவு நாளுக்கு நாள் சுருங்கி குளம் அழிந்து வருவதால், குளத்தை பாதுகாக்க அப்பகுதி வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:
தொள்ளாழி கிராம பொதுக்குளம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தும், வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் குளத்தை துார்வாரி பராமரிக்க, கடந்தாண்டு திட்டமிடப்பட்டது. எனினும், ஆக்கிரமிப்புகள் அகற்றாததால், அத்திட்டம் செயல்பாடின்றி உள்ளது.
எனவே, பொதுக்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

