/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
6 மாதங்களாக நடத்தப்படாத ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மத்திய அரசு திட்டங்களை அறிவதில் சிக்கல்

ADDED : நவ 08, 2025 12:49 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆறு மாதங்களாக நடத்தப்படாததால், மத்திய அரசின் திட்டங்களை பற்றி, மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். இக்குழுவின் தலைவராக, ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - -எம்.பி., பாலு உள்ளார்.
இந்த கூட்டத்தில், மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதாவது, மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, அவற்றின் தற்போதைய நிலை, தேவையான திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆய்வு செய்யப்படும்.
கலெக்டர், எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் இக்கூட்டம், ஆறு மாதமாக நடத்தப்படவில்லை.
லோக்சபா தேர்தல் முடிந்த பின், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒரு முறையும், நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஒரு முறை என, இரண்டு முறை மட்டுமே இக்கூட்டம் நடந்துள்ளது.
இதனால், மத்திய அரசின் திட்டங்களை, எம்.எல்.ஏக்கள், மேயர், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி ஒருங்கிணைந்து மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என, மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.