/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ... (08.11.2025) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ... (08.11.2025) காஞ்சிபுரம்
ADDED : நவ 08, 2025 12:49 AM
ஆன்மிகம் கரிகோலம் புறப்பாடு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலைகள் கரிகோலம் புறப்பாடு,, பாலதர்ம சாஸ்தா கோவில், ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, காஞ்சிபுரம், காலை 10:45 மணி; ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உத்சவம், இரவு 7:00 மணி; சுவாமி வீதியுலா, இரவு 8:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், காந்தி சாலை, தேரடி அருகில், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
வரசித்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
பொது கருத்தரிப்பு பரிசோதனை முகாம் ஏற்பாடு: சங்கரா பல்நோக்கு மருத்துவமனை அனந்தா கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம், ஸ்ரீசங்கர க்ருபா எஜுகேஷனல் டிரஸ்ட், ஏனாத்துார் சாலை, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
மருத்துவ முகாம் ஏற்பாடு: பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி, விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி, அரசு நகர், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30-7:30 மணி வரை; மாலை 5:30- 6:45 மணி வரை.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.

