ADDED : பிப் 01, 2025 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மாதம் ஒருமுறை நடத்தி வந்த நிலையில், சமீப காலமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின், இதுபோன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்தாண்டு நவம்பர் 19ல், மாநகராட்சி கூட்டம் நடந்த நிலையில், ஜனவரி மாதம் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரி மாதம் இறுதியில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்காக, கவுன்சிலர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற ஏற்கனவே மேயர் மகாலட்சுமி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், ஜனவரியில் நடைபெற திட்டமிட்டிருந்த மாநகராட்சி கூட்டம், பிப்ரவரி 7ம் தேதி அண்ணா அரங்கத்தின் முதல் மாடியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.