/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சட்ட விரோத குடிநீர் இணைப்பு அதிகரிப்பு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு

ADDED : ஆக 04, 2025 11:51 PM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில், சட்ட விரோத குடிநீர் இணைப்பு அதிகரித்துள்ளதாக, தி.மு.க., கவுன்சிலர், நகராட்சி தலைவரிடம் குற்றஞ்சாட்டினார்.
ஸ்ரீபெரும்புதுாரில் நகராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மன்றத் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் ஹேமலதா முன்னிலை வகித்தார். தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத் தலைவர் இந்திராணி வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., 11வது வார்டு கவுன்சிலர் வீரபத்திரன்: வீ.ஆர்.பி., சத்திரத்தில் உள்ள தாமரை குளத்தை பருவ மழைக்குள்ளாக துார்வாரி சீரமைக்க வேண்டும். அதே போல, பள்ளிக் கூட தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்து புதிய சிறுபாலம் அமைக்க வேண்டும்.
தி.மு.க., 13வது வார்டு கவுன்சிலர் இந்துமதி: வார் டில் சட்ட விரோத குடிநீர் இணைப்பு அதிகரித்து உள்ளது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதி அடைகின்றனர். எனவே, அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
அதே போல, நகராட்சி முழுதும் உள்ள மின் விளக்குகளை பராமரிக்க வேண்டும், வடிகால் துார் வருதல், பிரதான சாலையோரங்களில் உள்ள அரசியில் கட்சி பேனர் அகற்ற வேண்டும்.
கூடுதல் குப்பை சேகரிப்பு வாகனம் வேண்டும் மற்றும் நகராட்சி முழுதும் உள்ள குடிநீர் பிரச்னை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.