
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் தேங்கும் கழிவுநீர் கா ஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறிய கழிவுநீரால், சுற்றிலும் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இதனால், நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் கழிவு நீர் நிறைந்துள்ள பள்ளத்தால், நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, தாலுகா அலுவலக வளாகத்தில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும், பள்ளத்தை சமன்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.பாலாஜி, காஞ்சிபுரம்.