/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் பிரச்னைக்கு கவுன்சிலர் வலியுறுத்தல்
/
கழிவுநீர் பிரச்னைக்கு கவுன்சிலர் வலியுறுத்தல்
ADDED : மே 17, 2025 01:49 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, திருவள்ளுவர் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா சம்பத் கூறியதாவது:
பாதாள சாக்கடை பிரச்னை சம்பந்தமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மாநகராட்சி சார்பில், சீரமைப்பு பணி செய்கின்றனர்.
இது கண்துடைப்பாக மட்டுமே உள்ளது. நேதாஜி தெரு, லாலா குட்டை, வரதராஜபுரம், திருவள்ளுவர் தெருவில், சாலை மற்றும் வீட்டினுள் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்தொடரிலும் தெரிவித்தும், இதுவரை ஆக்கபூர்வமான எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.
எங்கள் பகுதியில், 'பம்பிங் ஸ்டேஷன்' அமைத்தால் மட்டுமே பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.