/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிதி விடுவித்தல் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி
/
நிதி விடுவித்தல் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி
ADDED : ஜூலை 24, 2025 01:40 AM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம் வாலாஜாபாத் பி.டி.ஒ., அலுவலகத்தில் நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை தலைவர் சேகர் மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரவு -- செலவு கணக்கு வாசிக்கப்பட்டு கவுன்சிலர்களிடத்தில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. 2025 - 26ம் ஆண்டுக்கான பொது நிதியின் கீழ் பணிகள் தேர்வு செய்தல் மற்றும் தேர்வு செய்த பணிகள் மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்குதல், நிதி விடுவித்தல் போன்றவை குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட பணிகள் ஊரக வளர்ச்சித் துறையின் பரீசிலனையில் உள்ளதாகவும், விரைவில் உத்தரவு கிடைக்கப் பெற்று நிதி விடுவிக்கப்படும் என, வாலாஜாபாத் பி.டி.ஒ., தானுராஜ் கூறினார்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில், சாலை, தெருவிளக்கு மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.