/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புளியம்பாக்கத்தில் 15 இடங்களில் 'சிசிடிவி' கேமரா இயக்கி வைப்பு
/
புளியம்பாக்கத்தில் 15 இடங்களில் 'சிசிடிவி' கேமரா இயக்கி வைப்பு
புளியம்பாக்கத்தில் 15 இடங்களில் 'சிசிடிவி' கேமரா இயக்கி வைப்பு
புளியம்பாக்கத்தில் 15 இடங்களில் 'சிசிடிவி' கேமரா இயக்கி வைப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:39 AM
வாலாஜாபாத்:புளியம்பாக்கம் முக்கிய பகுதிகளில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா அமைத்து திறப்பு விழா நடந்தது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து புளியம்பாக்கம் உள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான முக்கிய மையப் பகுதியாக புளியம்பாக்கம் அமைந்துள்ளது.
மேலும், புளியம்பாக்கத்தில் இருந்து, நத்தாநல்லுார் வழியாக, ஒரகடம் செல்லும் சாலை, சங்கராபுரம் வழியாக, பழையசீவரம் சாலை, அப்பகுதி பாலாற்று வழியாக அங்கம்பாக்கம் தடம் என முக்கிய சந்திப்புகள் உள்ளன.
இதனால், குற்றம் மற்றும் விபத்துகளை கண்காணிக்கும் பொருட்டு புளியம்பாக்கத்தில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை எழுந்தது.
அதன்படி, புளியம்பாக்கத்தில் பிரதான சாலை உட்பட 15 இடங்களில், 45 சிசிடிவி கண்காணிப்பு கேமரா சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.
அப்பகுதி ஊராட்சி தலைவர் பாலசந்தர் மற்றும் துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராபர்ட் மார்ட்டீன் மற்றும் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று கேமரா இயக்கத்தை துவக்கி வைத்தனர்.