sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணியில்... 134 சுற்று! மின்னணு இயந்திரத்திற்கு 14 மேஜைகள் அமைப்பு

/

காஞ்சி தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணியில்... 134 சுற்று! மின்னணு இயந்திரத்திற்கு 14 மேஜைகள் அமைப்பு

காஞ்சி தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணியில்... 134 சுற்று! மின்னணு இயந்திரத்திற்கு 14 மேஜைகள் அமைப்பு

காஞ்சி தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணியில்... 134 சுற்று! மின்னணு இயந்திரத்திற்கு 14 மேஜைகள் அமைப்பு


ADDED : மே 22, 2024 05:53 AM

Google News

ADDED : மே 22, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளும் சேர்த்து, 134 சுற்றுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மின்னணு இயந்திரத்திற்கான ஓட்டு எண்ணும் பணிக்கு, 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன.

அதிகபட்சமாக, செங்கல்பட்டு தொகுதியில், 31 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு, தேர்தல் விதிமுறைகள் பற்றியும், அவற்றை பின்பற்ற வேண்டியது குறித்தும் தெளிவாக கூறப்பட்டது.

காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதிக்கான தேர்தல், கடந்த ஏப். 19ல் நடந்தது. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 17.48 லட்சம் வாக்காளர்களில், 12.53 லட்சம் பேர் தேர்தலில் ஓட்டளித்தனர். இது, 71.68 சதவீதமாகும். அதிகபட்சமாக, மதுராந்தகம் சட்டசபை தொகுதியில், 78.8 சதவீதம் ஓட்டுப்பதிவானது.

லோக்சபா தொகுதிக்குட்பட்ட, 1,932 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையத்தில் உயர் பாதுகாப்பு அறையில் சீலிடப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 4 ஓட்டு எண்ணிக்கை


நாடு முழுதும் லோக்சபா தேர்தல் முடிவுற்ற பின், ஜூன் 4ம் தேதி, ஓட்டு எண்ணப்படுகிறது.

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஒட்டு எண்ணும் மையம், பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டு எண்ணும் மையம் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு அறையில் உள்ள திரைகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

இங்கு, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஓட்டு எண்ணும் நாளில், அன்றைய தினம் காலை அனைத்து கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் முன்னிலையில், சீல் அகற்றப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வெளியே கொண்டு வந்து எண்ணப்படும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மேற்பார்வையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓட்டு எண்ணும் பணிக்காக, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், தலா ஒரு ஓட்டு எண்ணும் அறைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஓட்டு எண்ணும் அறையிலும், தலா 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன.

ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து, 134 சுற்றுகள் எண்ணப்பட்டு, லோக்சபா தொகுதிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். அதிகபட்சமாக செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், 31 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன.

காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்களும், 8:30 மணிக்கு, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும்.

ஓட்டு எண்ண அமைக்கப்படும் ஒவ்வொரு மேஜையிலும், ஒரு நுண் பார்வையாளர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர் என, நான்கு பேர் இடம் பெறுவர்.

போலீஸ் தரப்பில், எஸ்.பி., சண்முகம் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கீழ், 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஓட்டு எண்ண அமைக்கப்படும் ஒவ்வொரு மேஜைக்கும் நான்கு பேர் பணியில் ஈடுபடுவர்.

தபால் ஓட்டு எண்ணுவதற்காக, எட்டு மேஜைகள் அமைக்கப்பட உள்ளன.தபால் ஓட்டு எண்ணப்படும் ஒவ்வொரு மேஜைக்கும், ஒரு துணை கலெக்டர் நிலையிலான அதிகாரி, ஒரு நுண் பார்வையாளர், ஒரு கண்காணிப்பாளர் உட்பட ஐந்து பேர் பணியில் ஈடுபடுவர்.

இணையத்தில் பதிவேற்றம்


இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மேஜையை கண்காணிக்கும் வகையில், தனித்தனியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போதிய வெளிச்சம் தரும் வகையில், ஏராளமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அறையில் இருந்து, மின்னணு ஓட்டு இயந்திரங்களை மேஜைக்கு கொண்டு வருவதற்கு, தாசில்தார் தலைமையில் ஒரு குழுவும், ஓட்டு எண்ணும் சுற்று முடிந்த பின், இயந்திரங்களை பெற்று சீலிடுவதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு சுற்றின் முடிவில் கிடைக்கும் முடிவுகளை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தனியாக ஒரு குழுவினர் செயல்படுவர்.

அதேபோல, குடிநீர், உணவு போன்றவை வழங்கவும், ஓட்டு எண்ணும் மையத்திற்கு உள்ளே வரும் ஏஜென்டுகளையும், அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்யவும் ஒரு குழு அமைக்கப்படுகிறது.

பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூபேந்திரசவுதரி நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதலாக ஐ.ஏ.எஸ்., நிலையிலான அதிகாரி ஒருவர் மற்ற மாநிலங்களில் இருந்து வர உள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில், பாதுகாக்கப்படும் தபால் ஓட்டு பெட்டிகள், ஓட்டு எண்ணும் நாளில் கொண்டு செல்லப்பட்டு பிரித்து எண்ணப்படும்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஐந்து விவிபேட் இயந்திரத்தில் விழுந்த சீட்டுகள் எண்ணப்பட்டு ஓட்டு சரி பார்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஓட்டு எண்ணிக்கையின்போது எண்ணப்பட உள்ள சுற்றுகள் விபரம்:

சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரம் ஓட்டு எண்ணும் சுற்றுகள்செங்கல்பட்டு 443 31திருப்போரூர் 318 22செய்யூர் 263 18மதுராந்தகம் 274 19உத்திரமேரூர் 303 21காஞ்சிபுரம் 331 23மொத்தம் 1,932 134








      Dinamalar
      Follow us