ADDED : ஜன 03, 2025 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெங்காடு கிராமத்தில் உள்ள கடைகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
ஜெயம் நகரில் உள்ள முருகன் மளிகை கடையில், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த, சாலமங்கலம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மகேஷ், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், வெங்காடு விஜி நகரில் உள்ள மளிகை கடையில் குட்கா விற்ற மகேஷின் மனைவி நிஷாந்தி, 36, போலீசார் கைது செய்து, இருவரிடமிருந்தும், 5,000 ரூபாய் மதிப்புள்ள, 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

