ADDED : அக் 09, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் சுற்றியுள்ள கிராமங்களில், 6.2 செ.மீ., மழை பதிவான நிலையில், மின்னல் தாக்கி பசு மாடு ஒன்று உயிரிழந்தது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழை அன்றாடம் பெய்து வருகிறது. வாலாஜாபாதில் நேற்று முன்தினம், 6.2 செ.மீ., மழை பெய்தது.
இதில், நாய்க்கன்குப்பம் கிராமத்தில், மின்னல் தாக்கி பசு மாடு ஒன்று உயிரிழந்தது. மாவட்டத்தில், வேறு எங்கும் மழை பதிவாகவில்லை.
மழை பாதிப்புகளை தெரிவிக்க, வரும் 15ம் தேதி முதல், கலெக்டர் வளாக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.