/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : அக் 09, 2025 11:09 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வேலுார் சாலை, ஒலிமுகமதுபேட்டையில், சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - வேலுார் சாலை, ஒலிமுகமதுபேட்டையில், சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பாதசாரிகளுக்கான நடைபாதையை, அப்பகுதி கடைக்காரர்கள் தங்கள் கடையை விரிவாக்கம் செய்து ஆக்கிரமித்துள் உள்ளனர்.
கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால், நடைபாதையில் செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையின் மையப் பகுதியில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் - வேலுார் சாலை, ஒலிமுகமதுபேட்டையில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.