ADDED : டிச 14, 2024 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருந்தியர்பாளையம், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் அமுதா, 50. இவர், நான்கு பசு மாடுகளை வீட்டின் பின்பக்கம் கட்டி வைத்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம்போல, தனது வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டி வைத்துவிட்டு, அமுதா தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, நான்கு பசு மாடுகளில் ஒரு மாட்டை காணவில்லை.
இதுகுறித்து அமுதா, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கீழ்கதிர்பூரைச் சேர்ந்த விக்னேஷ், 29, என்பவர் பசு மாட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.