/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
/
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
ADDED : ஜன 03, 2025 01:50 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம்-வாலாஜாபாத்-படப்பை சாலையில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வாலாஜாபாத் ஒன்றியத்தைச்சேர்ந்த, 61 ஊராட்சிகளைச்சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் அரசு சிமென்ட் எடுக்கவும், கம்பி பெற்று செல்லவும் வருகின்றனர். இது தவிர, வாலாஜாபாத், மாகரல், தென்னேரி ஆகிய குறு வட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் வருவாய் சான்றுகள் பெற தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் படுத்து ஓய்வு எடுக்கிறது. இதனால், தாலுகா அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிமென்ட், கம்பி எடுக்க வாகனங்களில் செல்வோருக்கு இடையூறாக உள்ளன.
குறிப்பாக, வாலாஜாபாதில் இருந்து படப்பை செல்வோர் மாடுகளின் மீது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம், திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.