/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை மைய தடுப்பில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
/
நெடுஞ்சாலை மைய தடுப்பில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலை மைய தடுப்பில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலை மைய தடுப்பில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 17, 2025 01:08 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை மையத் தடுப்பில் திரியும், ஓய்வெடுக்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், மாத்துார் கிராமத்தில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு திறந்த வெளியில் அவிழ்த்து விடுகின்றனர்.
அவை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை மையத் தடுப்பில் ஓய்வெடுக்கிறது. மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே எழுந்து ஓடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
விபத்திற்கு வழிவகுக்கும் வகையில், நெடுஞ்சாலை மைய தடுப்பு பகுதியில், ஓய்வெடுக்கும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.