/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிரேன் ஆப்பரேட்டர் விபத்தில் பலி
/
கிரேன் ஆப்பரேட்டர் விபத்தில் பலி
ADDED : பிப் 29, 2024 12:57 AM
சுங்குவார்சத்திரம்,:அரக்கோணம் அடுத்த, புதுகேசவரம், பழைய காலனியைச் சேர்ந்தவர் ரகுபதி, 48. இவர், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள விட்டாவிடாகை பகுதியில், கிரேன் ஆப்பரேட்டராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணி முடித்து, 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சுங்குவார்சத்திரம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், ரகுபதி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.
செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட ரகுபதி, நேற்று காலை உயிரிழந்தார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

