/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை
/
காஞ்சியில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை
ADDED : நவ 24, 2024 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள காஞ்சி கிரிக்கெட் அகாடமி உள்ளரங்கு பயிற்சி கூடத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிக்கு தயாராகுதல் மற்றும் அதற்கு தேவையான மனநிலை என்கிற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம், வந்தவாசி, செய்யாறு, வாலாஜாபாத், பாலுசெட்டிசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து 52 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், கிரிக்கெட் பயிற்சியாளரும் நடுவருமான வினோத்குமார், கிரிக்கெட் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை வழங்கி, வீரர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.