/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயிர் சாகுபடி கணக்கீடு பணி காஞ்சி கலெக்டர் அறிவுரை
/
பயிர் சாகுபடி கணக்கீடு பணி காஞ்சி கலெக்டர் அறிவுரை
பயிர் சாகுபடி கணக்கீடு பணி காஞ்சி கலெக்டர் அறிவுரை
பயிர் சாகுபடி கணக்கீடு பணி காஞ்சி கலெக்டர் அறிவுரை
ADDED : நவ 14, 2024 01:12 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நவ.,11 முதல் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இப்பணி, 519 வருவாய் கிராமங்களில், 1,16,323 சர்வே எண்கள், 11,07,628 உட்பிரிவு சர்வே எண்களை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, விதை சான்றுத் துறை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லுாரி மாணவர்களை கொண்டு, கணக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லுாரி மாணவர்களுக்கு இப்பணி மேற்கொள்வது குறித்து முன்கூட்டியே பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் வட்டம், விச்சந்தாங்கல் கிராமத்தில் வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லுாரி மாணவர்களை கொண்டு மின்னணு பயிர் சாகுபடி பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டார். அப்போது, உரிய காலத்தில் ஆய்வு செய்து, பணியை முடிக்க அறிவுறுத்தினார்.

