ADDED : பிப் 11, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், உத்திரமேரூர், சதக்கம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 44. இவர், ஓராண்டுக்கு முன், உத்திரமேரூர் மேல்கட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், 44, என்பவரிடம், ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை, கொடுத்த கடனை திருப்பி கேட்க, ஜெயகுமாருக்கு மொபைல்போனில் பேசிய செல்வகுமார், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பின், ஜெயகுமார் அன்று மதியம் செல்வகுமார் வீட்டிற்கு சென்றார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், செல்வகுமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து, ஜெயகுமாரின் கை மற்றும் தலையில் வெட்டினார்.
அக்கம்பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். உத்திரமேரூர் போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

