ADDED : அக் 27, 2026 06:00 PM
காஞ்சிபுரம் அருகே, செவிலிமேடு பாலாற்று பாலத்தில், ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் விபத்துகளில் சிக்குவதை தடுக்க வேண்டும். கனரக வாகனங்கள் செல்லும்போது, பாலம் ஆபத்தாக அதிர்வதாக பல முறை புகாரளித்தும், த.வெ.க.,அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது, அப்பட்டமான நிர்வாக அலட்சியம்.
ஒரு லாரி ஜல்லி கற்களை கொட்டி, மிக எளிதில் தீர்க்கப்பட வேண்டிய, ஓர் அடிப்படைபிரச்னையை கூட கவனிக்க தவறியிருப்பது தான், முதல்வர் விஜயின் நிர்வாக முறையா?
மக்களின் அன்றாட போக்குவரத்து பாதுகாப்பை கூட, உறுதி செய்யத் தவறி, தன் நிர்வாகத் திறமையின்மையை, விஜய் அரசு அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது. உயிர்ப்பலிகள் நிகழும் முன், பாலத்தின் பள்ளங்களை உடனடியாக சீரமைப்பதோடு, அதன் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும்.
– நயினார் நாகேந்திரன்
தமிழக தலைவர், பா.ஜ.,
