/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் 'மேன்ஹோல்' சேதம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
கால்வாய் 'மேன்ஹோல்' சேதம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
கால்வாய் 'மேன்ஹோல்' சேதம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
கால்வாய் 'மேன்ஹோல்' சேதம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : ஜன 16, 2025 01:13 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், பழமண்டி, உணவகம், டாஸ்மாக், பலசரக்கு மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.
வாகன போக்குவரத்தும்,பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், சினிமா தியேட்டர் ஒட்டியுள்ள மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலம் அருகில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயின் 'மேன்ஹோல்' சேதம டைந்து, திறந்த நிலையில் உள்ளது. அதனால், சாலை வளைவான இப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடிவிபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளும், சேதமான கால்வாய் மேன்ஹோலில் தவறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமான கால்வாய் மேன்ஹோலை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.

