/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் பள்ளி முன் வடிகால்வாய் சிலாப் சேதம்
/
உத்திரமேரூரில் பள்ளி முன் வடிகால்வாய் சிலாப் சேதம்
உத்திரமேரூரில் பள்ளி முன் வடிகால்வாய் சிலாப் சேதம்
உத்திரமேரூரில் பள்ளி முன் வடிகால்வாய் சிலாப் சேதம்
ADDED : செப் 25, 2025 12:39 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பள்ளி முன் செல்லும் வடிகால்வாய் மீது கான்கிரீட் சிலாப் அமைக்க பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, பாவோடும் தோப்பு தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியை ஒட்டி செல்லும் சாலையோரத்தில் வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வடிகால்வாயில் அவ் வழியே செல்வோர் தவறி விழாமல் இருக்க, அதன் மீது கான்கிரீட் சிலாப் அமைக்கப் பட்டு இருந்தது.
தற்போது , வடிகால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமல், ஆங்காங்கே கான்கிரீட் சிலாப் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர், வாகன ஓட்டிகள் ஆகியோர், வடிகால்வாயில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
எ னவே, பள்ளி முன் செல்லும் வடிகால்வாய் மீது கான்கிரீட் சிலாப் புதிதாக அமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் வலியு றுத்தி வருகின்றனர்.