/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் சிமென்ட் சிலாப் சேதம்
/
மழைநீர் கால்வாய் சிமென்ட் சிலாப் சேதம்
ADDED : டிச 02, 2024 02:16 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோரம், மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையின் இரு புறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. ஒரகடம் மேம்பாலத்தில் இருந்து, சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையோரம், ஒரகடம் ஏரி அருகே, மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட, சிமென்ட் சிலாப் உடைந்து உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள், கால்வாயில் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், கால்நடைகள் சேதமான கால்வாய் பள்ளத்தில் விழுந்து வருகின்றன. எனவே, சாலையோர மழைநீர் கால்வாயில் உடைந்துள்ள சிமென்ட் சிலாபை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.