/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரே வருடத்தில் இணைப்பு சாலை சேதம்
/
ஒரே வருடத்தில் இணைப்பு சாலை சேதம்
ADDED : ஜன 08, 2025 09:50 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் ஊராட்சி, நரியம்புதூர் கிராமத்தில், 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியின் முன், நீர்வரத்து கால்வாய் மீது பாலம் கட்ட, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது.
கடந்த, 2023 - - 24ம் நிதி ஆண்டில், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் செலவில், புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த பாலத்தின் வழியே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்புலிவனம், உத்திரமேரூர், சாலவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு, ஒரு ஆண்டே ஆன நிலையில், இணைப்பு சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு, ஏற்ற சாலையாக இல்லாமல் உள்ளது.
இதை சீரமைக்க துறை அதிகாரிகளிடம், பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பாலத்தின் இருபுறமும் சேதமடைந்த, இணைப்பு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

