/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்நிலை தொட்டியின் துாண் சேதம் மருதம் கிராமத்தில் விபத்து அபாயம்
/
மேல்நிலை தொட்டியின் துாண் சேதம் மருதம் கிராமத்தில் விபத்து அபாயம்
மேல்நிலை தொட்டியின் துாண் சேதம் மருதம் கிராமத்தில் விபத்து அபாயம்
மேல்நிலை தொட்டியின் துாண் சேதம் மருதம் கிராமத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜன 17, 2025 12:59 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின் விசை குழாய்கள் ஆகியவை வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஊராட்சி அலுவலகம் அருகே, ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் துாண் ஒன்று சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, எந்த நேரமும் இடிந்து விழும் என்பதால், இதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திடீரென இடிந்து விழும் நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.