ADDED : நவ 11, 2024 02:43 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளைகேட் மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தை ஒட்டியுள்ள சாலையோரம் கான்கிரீட் தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய் மீது போடப்பட்டுள்ள தளத்தை பாதசாரிகள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திம்மசமுத்திரம் ஊராட்சி, ஸ்ரீபாலாஜி நகரை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் தளம் சேதமடைந்துள்ளது.
கால்வாய் சேதமடைந்து திறந்து கிடப்பதால், இரவு நேரத்தில் கால்வாய் தளத்தில் நடந்து வரும் பாதசாரிகள், சாலையோரம் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள். கால்வாய் பள்ளத்தில் நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.