/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த மின்கம்பங்கள் கோவிந்தவாடியில் ஆபத்து
/
சேதமடைந்த மின்கம்பங்கள் கோவிந்தவாடியில் ஆபத்து
ADDED : ஜன 16, 2025 01:02 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் இருந்து, திருமால்பூர் கிராமத்திற்கு செல்லும் மண் சாலை உள்ளது.
சாலையோரம், சில குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு, மின் இணைப்பு வழங்கு வதற்கு, மின் வாரிய அதிகாரிகள் சாலையோரம் சிமென்ட் மின் கம்பத்தை நட்டு, மின் இணைப்புகள் வழங்கி உள்ளனர்.
இதன் வாயிலாக, அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் தனியார் அரவை நிலையத்தினர் பயன்பெற்று வந்தனர்.
தற்போது, இந்த சாலை யோரம் இருக்கும் இரு மின் கம்பங்களும், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு, எலும்புக்கூடாக காட்சி அளிக்கின்றன.
பலமாக காற்று அடித்தால், மின்கம்பம் முறிந்து, குடிசைகள் மீது விழுந்து, மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், கோவிந்தவாடி- - திருமால்பூர் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மின்விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கோவிந்தவாடி - திருமால்பூர் செல்லும் சாலையோரம், சேதமடைந்து இருக்கும் மின்கம்பங்களை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறுகையில், 'மின்கம்பங்களை மாற்ற, நாங்கள் பணம் செலுத்த வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டு, உயிர் பலி ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவார்களா'என்றனர்.