/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான பொன்னேரிக்கரை சாலை நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
/
சேதமான பொன்னேரிக்கரை சாலை நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
சேதமான பொன்னேரிக்கரை சாலை நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
சேதமான பொன்னேரிக்கரை சாலை நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
ADDED : பிப் 17, 2025 01:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் டூ - வீலர், கார், வேன், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனஙகள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலை கடந்த ஆண்டு பெய்த பருவமழையாலும், கனராக வாகனங்கள் அதிகம் சென்றதாலும், சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.
இதனால், இச்சாலையல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக தார்கலவை வாயிலாக நேற்று சீரமைத்தனர்.