/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான வி.ஏ.ஓ., அலுவலகம் இராவத்தநல்லுாரில் அவலம்
/
சேதமான வி.ஏ.ஓ., அலுவலகம் இராவத்தநல்லுாரில் அவலம்
UPDATED : டிச 04, 2024 02:41 AM
ADDED : டிச 04, 2024 12:15 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, இராவத்தநல்லூர் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.
இங்கு, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா, சிட்டா, வருவாய் சான்றிதழ், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை தொடர்பாக தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த கட்டடம், முறையாக பராமரிப்பு இல்லாததால் ,பழுதடைந்து, கூரையில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.
மழை நேரத்தில் கூரையிலிருந்து, மழைநீர் சொட்டுவதால் ஆவணங்கள் நனைந்து பாழாகி வருகிறது. இந்நிலையில் ,பெஞ்சல் புயலால் கடந்த ,மூன்று நாட்களாக பெய்த மழையால், கட்டடம் ஈரத்தன்மையுடன் கூரையிலிருந்து மழைநீர் சொட்டுகிறது.
இதனால், உள்ளே அமர்ந்து பணி செய்ய முடியாத ,கிராம நிர்வாக அலுவலர் வெளியே அமர்ந்து பணி செய்து வருகிறார். எனவே, பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தாசில்தார் தேன்மொழி கூறியதாவது :
பழுதடைந்த வி.ஏ.ஒ., கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.