/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்டலம், புள்ளலுாருக்கு மின் விளக்கு அமைக்க கோரிக்கை
/
தண்டலம், புள்ளலுாருக்கு மின் விளக்கு அமைக்க கோரிக்கை
தண்டலம், புள்ளலுாருக்கு மின் விளக்கு அமைக்க கோரிக்கை
தண்டலம், புள்ளலுாருக்கு மின் விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 15, 2025 07:48 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கம் கிராமத்தில் இருந்து, பள்ளம்பாக்கம் கிராமம் வழியாக, தண்டலம் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம், பரந்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் கொட்டவாக்கம், பள்ளம்பாக்கம் கிராமங்களின் வழியாக தண்டலம், புள்ளலுார் ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல், தண்டலம், புள்ளலுார், கணபதிபுரம் ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கொட்டவாக்கம், பரந்துார் கிராமங்களின் வழியாக காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.
கொட்டவாக்கம், பள்ளம்பாக்கம் ஆகிய துணை கிராமங்களின் அருகே, சில மின் கம்பங்களில் மின் விளக்கு எரிகிறது. கொட்டவாக்கம்-பள்ளம்பாக்கம், பள்ளம்பாக்கம்- தண்டலம் மற்றும் பள்ளம்பாக்கம்-புள்ளலுார் இடையே மின் விளக்கு வசதிகள் இல்லை.
இதனால், தனியார் தொழிற்சாலைகளில் வேலை முடித்துவிட்டு, இரவு நேரங்களில் வீடு திரும்புவோர் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது.
எனவே, கொட்டவாக்கம்-பள்ளம்பாக்கம்-புள்ளலுார், தண்டலம் இடையே மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.