/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் அபாயம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் அபாயம்
ADDED : பிப் 14, 2025 12:55 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் அழகூர் கிராமத்தில் இருந்து மாகாணியம், மலைப்பட்டு வழியாக ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம்கம்பங்களின் வழியே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளன. இதனால், அறுவடைக்கு பின் வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்லும் டிராக்டர், எதிர்பாராத விதமாக மின்கம்பிகள் மீது உரசும் போது, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதேபோல், இவ்வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, மின்கம்பிகள் மீது உரசி, விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றன.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.