/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொங்கும் மின்கம்பியால் விபத்து அச்சம்
/
தொங்கும் மின்கம்பியால் விபத்து அச்சம்
ADDED : மார் 14, 2024 11:43 PM

ஊவேரி:பள்ளூர் - சோகண்டி சாலையில் இருந்து, மணியாட்சி கிராமத்திற்கு செல்லும் பிரதான கிராம சாலை உள்ளது. இந்த சாலை ஓரம், தனியார் கல் அரவை தொழிற்சாலைக்கு செல்லும் மின் வழித்தடம் செல்கிறது.
தற்போது, தனியார் கல் அரவை நிலையம் இயங்காததால், மின் வழித்தடம் காட்சிப்பொருளாக உள்ளது.
இந்த மின் வழித்தடத்தில் செல்லும் மின்கம்பிகள் அறுந்த நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதால், ஆடு, மாடு மேய்க்க செல்லும் நபர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மின்விபத்து ஏற்படும் அச்சத்தில் செல்ல வேண்டி உள்ளது.
இந்த மின் வழித்தட கம்பியில் மின்சப்ளை இல்லை என்றாலும், அந்த சாலை வழியாக செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பியை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மின்கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

